ஏன் புலம்புகின்றீர்கள்?
எதற்காக இந்த
ஒப்பாரியும் அழுகையும்?
அழுகை என்பது எதிர்மறை.
இதனை நேர் மறையாக்க
அந்த ஏழுகடல் கண்ணீர்
அத்தனையயும் அல்லவா
இறைத்தாக வேண்டும்.
நேர் என்ன?எதிர் என்ன?
எல்லாம் நலமாக இருந்தால்
வண்ண மயில் முருகன்
அழகோ அழகு தான்.
உள்ளம் கொஞ்சம் குப்புறக்கவிழ்ந்தாலும்
எரிச்சலில்
இந்த ரெண்டு பொண்டாட்டிக்காரனை
கும்பிட்டு என்ன லாபம் என்போம்.
கடவுளுக்கு தாடி மீசை
கொம்பு பல் மழு ஆயுதம்
கூடவே இரண்டு மூன்று
பொண்டாட்டிகள்...
இதெல்லாம்
நம் மனத்து அரக்கத்தனங்கள்.
நம் மனதுகளையெல்லாம் கழற்றி
அடித்துத்துவைத்து காயப்போட்டு
மடித்து எடுத்து வைக்க வேண்டும்.
புத்தகங்களும் கூகிள்களும் போதும்.
சிறு பிள்ளை விளையாட்டுக்கு
மாத்திரமே
கோவில்களும் கும்பாபிஷேகங்களும்.
இப்போது இது கோரைப்பல் காட்டி
பலி கேட்கிறது.
மத முக்த் பாரதம் தான் வேண்டும்.
இல்லாவிட்டால்
காணி நிலம் வேன்டும்..
பத்து பதினைந்து தென்னை மரங்கள்
வேண்டும்.
அதனூடு முத்துச்சுடர் போல்
முழு நிலா வரவேண்டும்...
என்றெல்லாம்
எழுத்தைப்பிழிந்து "இன்பச்சாறு"
குடிக்கலாம்.
__________________________________________________
ருத்ரா
2 comments:
அருமை நண்பரே..
மிக்க நன்றி நண்பரே.
Post a Comment