2021-08-28

பேய்


 பேய்

=======================================ருத்ரா


ஆற்றங்கரை மருத மரம்.

அடியில் நான்

கற்சிலையாய்

மரத்தின் கிளை ஆடும் நிழலை

ஆற்றில் சுழிப்பில்

பார்த்து பார்த்து

காலத்தருணங்களோடு

என்னை நெசவு செய்து கொண்டேன்.

நிழல் கையாட்டி விடை கொடுப்பது

தெரிந்தது.

வளையல்களுடன்

அதன் ஒலிகளுடன்....

இறுதியாய் குமிழிகளுடன்.

அவளை காப்பாற்ற‌

அவளோடு மூழ்கிபோகாத‌

கோழையாகிபோனேன்.

என் வாழ்க்கை மிச்சத்தை

ஒரு எலும்புக்கூடாக்கிக்கொண்டேன்.

காலம் இதையும்

ஒரு "நோவாக்கப்பல்" ஆக்கியது.

பிரளயத்தில் மிதந்து கொண்டு தான் போகிறேன்.

சிரிப்புகள் கூத்துக்கள் அதன் கூடுகள்

குஞ்சுகள் சிறகுகள் 

எல்லாமே ஒரு தேசம் ஆகியது.

ஆனால் வெறுமையின் தேசம்.

அவள் சிரிப்பு மட்டும்

எங்கிருந்தோ இன்னும் கேட்கிறது.

உற்றுக் கேட்டு

கூர்மையாய் நான் கரைந்தே போனேன்.

மருதமர கிளையும் இலைகளும்

எதேதோ பேசின.

அப்பா..என்னப்பா?

பேசவே மாட்டேங்கிறே..

என் மடியில் இருந்த என் குழந்தையின்

குரல் இது..

ஐயோ இவ்வளவு நேரம்

குழந்தை திக்கு முக்காடிப்போயிருப்பாளே!

இறுக்க அணைத்துக்கொண்டு

முத்தங்கள் பொழிந்தேன்.

குழந்தை இப்போதும் 

திக்கு முக்காடிப்போயிருப்பாளோ!

அந்த இடைவெளி எனும்

காலப்பிசாசு

செத்தொழியட்டும்

இந்த முத்தங்களின் குத்தீட்டிகளில்

செத்தொழியட்டும்.

ஹா..ஹா..ஹா..ஹா

என் சிரிப்பைக் கண்டு குழந்தை பயந்தாள்!

"அப்பா என்னாச்சு?"

"ஒண்ணுமில்லம்மா..சும்மாதான். 

ஒரு குஷியிலே தான்"

"ஹா..ஹா...ஹா..ஹா.."

"பயந்துட்டியா அப்பா?

நானும் குஷியில‌ தான்!"

குழந்தையும் சொல்லிச்சிரித்தாள்.


===============================================

23rd Sep 2016

பேனாவின் வழியே வழிந்தது ஒரு 

"மின் சிறுகதையாய்"இக்கவிதை.

=======================================ருத்ரா

2021-08-24

குழந்தைகளின் புத்தகம்

 குழந்தைகளின் புத்தகம்


தன் பிரியமான மயில்பீலிகள்

குட்டி போடும்

மிகவும் பிரியமான 

தன் கர்ப்பப்பை

_______________________________

ருத்ரா

கோபம்



வானம் போக்கு காட்டியது.

கோபம் கொண்ட எவனோ

ஒரு குத்து விட்டிருப்பான் 

போலிருக்கிறது.

பாருங்கள் பற்கள் உதிர்ந்து...

எத்தனை நட்சத்திரங்கள்?


__________________________

ருத்ரா

ஒரு வலைப்பூ

 ஒரு வலைப்பூ

அந்த முகப்புப் படத்தில்

அழகிய பூக்கள் பரப்பிய‌

பாதையில்

ஒரு குழந்தை நடக்கிறது.

அதை 

என் "காமிரா" "க்ளிக்"கியதில்

வந்த கவிதை இது.

"அனிச்சப்புன்னகையே!"

எச்சரிக்கை எச்சரிக்கை!

காலடியில் 

எத்தனை முட்கள்?

______________________

ருத்ரா





பட்டம் விடுகிறவன்

 பட்டம் விடுகிறவன் 

காதலிக்கத்துவங்கினான்.

அவனும் "மாஞ்சா" அரைத்தான்

தன் மனத்தைப்பொடிபொடியாய்

நொறுக்கி!


________________________________

ருத்ரா


2021-08-16

வேடிக்கை பார்த்துக்கொண்டே இரு.



 வேடிக்கை பார்த்துக்கொண்டே இரு.

_____________________________________________________ருத்ர


 

ஓ! தென்னை மரமே!


வேடிக்கை பார்த்துக்கொண்டே இரு.


உன் கூந்தலை 


சிலுப்பி சிலுப்பிக்கொண்டிருந்தாலும்


ஒன்றும் நிற்கப்போவதில்லை.


இந்த மக்களின்


கண்ணாடி பிம்பம் 


சுக்கல் சுக்கலாக‌


நொறுங்கிக்கொண்டிருக்கிறது.


அப்போதும் 


இந்த மண்ணின் கனவு 


மொழி இனமாண்பு


எல்லாம்


நொறுங்கிப்போன நிழல்களாக‌


கீழே கிடக்கின்றது.


பன மரத்திற்கும் தென்னை மரத்திற்கும்


ஈச்ச மரத்திற்கும் விடுதலை


என்று அன்று


நம் சுதந்திர சுவாசத்தை


கொண்டாடினார்கள்.


ஆனாலும் நம் வெளிச்சக்கதிர்கள்


எல்லாம்


அந்த கண்ணாடிப்புட்டிகளின் வழியே


இன்னும் இங்கே


ஏழுவர்ணம் காட்டுகின்றது.


பழைய பத்தாம்பசலிகளின்


நான்கு வர்ணங்களோடு


இன்னும் பல

 

குறுகியவெறி வர்ணங்களும்


சேர்ந்து


அதோ தோரணங்கள் ஆடிக்கொண்டே தான்


இருக்கின்றன.


புதிய கொண்டாட்டங்களுக்கு


கொடியை


துணிவிரித்துக்காட்டப்போகும்


உற்சாகங்களையும்


வேடிக்கை பார் தென்னை மரமே!


எத்தனையோ கோடி மக்கள்!


இவர்கள் எழுச்சி பெற்றால் 


என்னாவது?


ஓ மக்களே!


பத்து பேருக்கு நூறு ஒற்றர்கள்!


இதற்கு பேரா நாடு?


உங்கள் முதுகை சுரண்டிக்கொண்டிருக்கும்


அந்த முட்களின் காம்பினிலே தான்


முகம் காட்டுகின்றன‌


அந்த மூவர்ணரோஜாக்கள்.


______________________________‍‍____________