எப்படி வேண்டுமானலும்
எதற்கு வேண்டுமானாலும்
கவலைப்படு.
கவலைப்படவேண்டுமே
என்ற
கவலையே இல்லாமல்
கவலைப்படு.
கவலைகள் அடர் மழை தான்.
இந்தக் கவலையையே
குடையாக்கிக்கொள்.
கொஞ்ச நாளில்
உன் அகராதியே மாறிப்போகும்.
எந்தச்சொல்லுக்கு
நீ அர்த்தம் தேடினாலும்
அது கவலை என்றே
அர்த்தம் சொல்லும்.
இப்போது தான்
ஒரு சொல்லின் அர்த்தம்
அகராதியே இல்லாமல்
உனக்கு புரிந்து போயிருக்கும்.
அது
"வாழ்க்கை"
___________________________________________________
ருத்ரா
2 comments:
இரசித்தேன்.
மிக்க நன்றி கில்லர்ஜி அவர்களே
கவலையுள்ள மனிதனுக்குள் இருந்த
அந்த கவலையில்லாத மனிதனை
கண்டுகொண்டதற்கு.
______________________ருத்ரா
Post a Comment