தீர்வு
____________________________________________
ருத்ரா
அந்த பாழடைந்த மூலையில்
நூலாம்படைகளின் சித்திரம்.
தூரிகை
கண்ணுக்குத்தெரியாமல்
வண்ணங்கள் ஏதும் குழைக்காமல்
அந்த கோட்டோவியமே
நம் நிலை காட்டும் ஓவியம்.
எத்தனைப் பூச்சிகளை
சுருட்டி சுருட்டிப்போட்டு
அந்த சிலந்தி விழுங்கியிருக்கிறது.
சாதியாக
மதமாக
சடங்குகளாக
சாஸ்திரங்களாக
மந்திரக்கூப்பாடுகளாக
இந்த மக்கள் எல்லாம்
இந்த மாயவலையில்
சுருட்டப்படுகிறார்கள்.
இத்தனை நூற்றாண்டுகளாக
இந்த பின்னலும் நெசவும்
மூடத்தனத்தில் முடங்கிய நம்
சரித்திரங்களையே
சின்னாபின்ங்களின்
சித்திரங்கள் ஆக்கியிருக்கின்றன.
அந்த பாழடைந்த மூலைகளில்
இதோ நம்
பகுத்தறிவு தீப் பந்தங்களைப்
பிடியுங்கள்.
விட்டால் இந்த சாணக்கிய சிலந்திகள்
விடிவின் வாசல் திறக்கும்
சூரியன்கள் மீதே
ஒட்டடை படர்ந்து
நம்மை
அறியாமை இருட்டில் தள்ளிவிடும்.
விழித்தெழு தமிழா!
இனி உன் குரலே
யாவற்றுக்கும் தீர்வு.
______________________________________________
2 comments:
அருமையான அறச்சீற்றம்.
"அறஞ்செய விரும்பு"
என்பதன் இன்றைய அர்த்தமே
"அறச்சீற்றம் கொள்" என்பது தானே.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
Post a Comment