2022-09-14

திரண்டு நில்லுங்கள்

 திரண்டு நில்லுங்கள்

__________________________________________ருத்ரா


இளைஞர்களே!

உங்கள் காதுகளுக்குள்

எத்தனை கிலுகிலுப்பைகள்?

உங்கள் இமையோரங்களில்

ஜிகினாக் கனவுகளின் கூடாரங்கள்

எத்தனை? எத்தனை?

இன்னும் 

அடி குத்து வெட்டு

ஆகாசங்களையே சுருட்டு சுருட்டு

என்று பிசைந்து எடுத்து 

எம்பிக்குதித்து

எத்தனை சொமர்சால்ட்டுகள்?

சூப்பர்ஸ்டார் அரிதாரங்களின்

நயாகரா நீர்வீழ்ச்சிகளில்

சுகமாக தொலைந்து போகிறீர்கள்?

கால ஓட்டங்கள்

உங்களையும் சுமந்து கொண்டுதான்

ஓடுகின்றன.

நெட்ஃப்லிக்ஸ் உங்கள் நுண்பொறிகளில்

மயில் இறகுகள் கொண்டு

கிச்சு கிச்சு மூட்டுகிறது.

சத்யஜித்ரே பாணி படங்களின்

கலவையில்

பாகுபலி கிராஃபிக்ஸ்களும்

சேர்ந்து உங்கள்

சினிமாத்தனத்தை தோலுரிக்கத்

துவங்கி விட்டன.

சிட்டிசன்களின் முதுகுக்குப்பின்

நிழல்களாக‌

நெட்டிசன்களாகவும்

நீங்கள் மார்ஃபாசிஸ் பிம்பத்துள்

நன்றாகவே அச்சம் காட்டுகிறீர்கள்.

இந்த சமுதாய மருத்துவத்தில்

போலிகளும் 

பணமூட்டைகளைக்கொண்டு

வக்கிரம் அடைந்த அரசியலை

பிலிம் காட்டும் அபாயங்களையும்

ஓ! இளைஞர்களே!

உங்கள் அறிவின் திட்பத்தின்

நுட்பம் கொண்டு எதிர்க்கத்

திரண்டு நில்லுங்கள்.

நம்பிக்கையின் கொழுந்து நெருப்பில்

நீங்கள் காட்டும் வெளிச்சமே

இங்கு 

எல்லா கனத்த  இருட்டுக் கத‌வுகளையும்

தவிடு பொடியாக்கி விடும்.


_____________________________________________________

 


2 comments:

KILLERGEE Devakottai said...

இளைய சமூகத்தினருக்கு நல்லதொரு அறிவுரை.

ruthraavinkavithaikal.blogspot.com said...

நன்றி! கில்லர்ஜி அவர்களே.
இளையசமுதாயம் கொஞ்சம் நிமிர்ந்து பார்ப்பதற்குள் திசை திருப்பல்கள் திட்டம்போட்டு நிகழ்த்தப்படுகின்றன.விழிப்புணர்ச்சி மட்டுமே போதாது.தடைகள் எதிர்கொண்டு நொறுக்கப்படும் "எதிர் வினை"உணர்வுகள் நுட்பமாக
அறியப்படவேண்டும்.
அன்புடன் ருத்ரா