2022-10-13

திருநீறாற்றுப்படை

 திருநீறாற்றுப்படை

_______________________________________

ருத்ரா




மந்திரமாவது நீறு என்று பாடி

சுந்தரத்தமிழ் அன்று ஒளிகாட்ட‌

இமை உயர்த்தி நாமும் வியந்தனமே.

இமையவன் புகழும் `பரவியதே.


சைவம் உலகில் தழைத்திடவே

தத்துவம் உயர்ந்து பரவியது.

என்ன தத்துவம் அது என்று

உள்ளே சித்தம் குதித்தது காண்.


பாட்டம் அப் ..டாப் பாட்டம் என‌

ஆங்கிலம் சொல்வதே அதுவாகும்.

அடி முடி கண்டால் போதும்

அண்டம் யாவும் விளங்கிடுமே.


உன்னை அறிய உன்னுள் நுழைய‌

உன் மிச்சம் என்ன அறிந்திடுவாய்.

வாழ்வு முடிந்து சுடலைப் பொடியாய்

மிஞ்சியதை நீ உள்ளறிவாய்.


சாம்பல் அல்ல அதுவென்றுணர்.

சாவி கிடைத்ததா?பூட்டுள் செல்.

பாஸ்வர்ட் தன்னைப்பற்றிக்கொள்

அதுவே அறிவியல் அது தெளிவியல்.


தெளிவு தான் "பிரசாதம்" என்றே உணர்.

குவாண்டம் இயற்பியல் உன் கோவில்

நாத்திகம் அறிய ஆத்திகம் செல்.

ஆத்திகம் அறிய நாத்திகம் செல்.


எது?என்ன? அது இது என்ன?

இருப்பும் இன்மையும் இரண்டறக்கலந்து

இன்மையும் ஆகி இருப்பும் ஆகி

நுண்மை அடர்த்தி புகுந்திடுவாய்.


ப்ராபபலிடி டென்சிடி அறிந்தாலே

ஆயிரம் சிவன்கள் உன் சிந்தையிலே

அடக்கம் ஆகும் அடங்காமையும் ஆகும்.

பெருவெடிப்பே உன் பிள்ளையார் சுழியாம்.


சுழிகள் ஸ்பைரல்களே காலக்சிகள் ஆகும்.

குவாண்டம் ஸ்பேஸ்ல் கோடி கோடியாய்

அண்டங்கள் யாவும் கரு தரிக்கும்!

அறிந்தால் போதும் சிவன்கள் எதற்கு?


இரண்டு குவாண்டம் எங்கோ இருந்து

சடை பின்னிக்கொள்ளும் இடையே

பில்லியன் பில்லியன் மைல்கள் என‌

ஒரு நொடியின் கோடித்துளியில்.


குவாண்டம் என்டாங்கிள்மெண்ட் எனும்

அந்த சிதம்பர ரகசியம் தெரிந்துவிடு.

இந்த வர்ண சாத்திரம் எல்லாம் இனி

தவிடு பொடிகள் ஆகிடட்டும்.


அந்த பொடியே  உன் திருநீறு.

பூசிக்கொள் உன் சிந்தையிலே அந்த‌

புரட்சியே உனக்கு தரிசனமாம் 

வறண்ட சாத்திரம் தொலையட்டும்.


திரு நீறாற்றுப் படை இதுவே.

இப்படை போதும் எப்படையும் வெல்ல.

உன்னை நீயே அழித்திடவா இங்கு

ஆகமம் ஆயிரம் நான் தந்தேன்.


அல்லவை அல்லவை அவை எல்லாம்

நல்லவை நல்லவை எது என்று

பகுத்தறிந்த கண் சொல்லும் இனி

அறிவியலே உன் திருநீறு.


நெற்றிக்கண் வேறு எங்கும் இல்லை

அந்த ஜேம்ஸ்வெப்பின் டெலஸ்கோப் தான்.

துருவு!துருவு!உற்றுப்பார்

எல்லாம் தெரிவாய்.எல்லாம் தெளிவாய்!


மன் திறம் இதுவே அறிவாய் நீ மற்ற‌

மந்திரக்கூச்சல்கள் தூர எறி.

எக்ஸொ பிளானட்டுகள் உனக்கு உண்டு.

சொர்க்கம் நரகம் இனி எதற்கு?



____________________________________________________________









2 comments:

KILLERGEE Devakottai said...

அருமை நண்பரே...

ruthraavinkavithaikal.blogspot.com said...

மிக்க நன்றி