நனவை தின்ற கனவு.
_____________________________________________
ருத்ரா
வாழ்வது போல்
அல்லது
வாழ்ந்தது போல்
ஒன்றை வாழ்ந்து விட்டோம்.
மீதி?
முழுவதுமே மீதி.
தொடங்கவே இல்லை.
மூளைச்செதில்களில் மட்டும்
காலப்பரிமாணத்தின்
வேகம் கூட்டி...
வேகம் என்றால்
சாதாரண வேகம் இல்லை
சூப்பர் லுமினஸ்...
ஒளியை விட கோடி மடங்கு கூட
இருக்கலாம்.
இந்த பிரபஞ்சத்தின் இந்த அடுக்கு தாண்டிய
இன்னொரு அடுக்கில்
நீ எட்டு எடுத்து வைத்திருக்கிறாய்.
இன்னும் சில பத்து ஆண்டுகளில்
புதிதாக பிரபஞ்சப்பூக்களை
உன் கோட் பித்தான் துளைகளில் கூட
பதியம் போட்டுக்கொள்வாய்.
உளுத்துப்போன புராணங்களில்
வெர்ச்சுவல் காஸ்மாலஜி மாடல்கள்
குமிழி இட்டுக்கொண்டே இருக்கலாம்.
மனிதம் மீறிய
பில்லியன் பில்லியன் சிந்தனை சிப்பங்களும்
அறிவியல் மூளை மடிப்புகளும்
உன் எண்ண அசைவுகளிலேயே
இயக்கம் பெறுவதாக இருக்கலாம்..
என்ன இது?
சூரியனின் ஒரு பகுதி பிய்ந்து
விட்டதாமே.
ஜேம்ஸ்வெப் சொல்லிக்கொண்டு இருக்கிறது.
உன் சன்னல்களில் அது
நுழைகி....றது...
சைஃபை மூவியால் இந்த
ஹேலுசினேஷன்...
அவன் ரத்தவெள்ளத்தில்.
டாக்டர் சுருக்கமாய் சொல்லிவிட்டார்.
செரெபெரல் ஹேமரேஜ்.
________________________________________________________
No comments:
Post a Comment