அகநானூறு 244
மதுரை மள்ளனார்.
முல்லை
வினைமுற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்கு சொல்லியது.
தலைவன் வினைமுடித்து இல்லம் திரும்பும் ஒரு வவ்வால்காடு.அது பற்றி அவர் குறிப்பிடும் உவமை வரிகளும் அழகு மிக்க சொல்லாடல்களும் மிக அருமை.சங்கப்புலவர் மதுரை மள்ளனார் அந்த அடர்ந்த காட்டில் மிக உயர்ந்த மரங்களின் நீர்ப்பசை ஈரத்தால் பசுமையை ஒட்டிவைத்தாற் போன்றும் கிளைகளில் நெய்தடவியதைப்போன்றும் அந்த சூரியவெளியில் அவை மினு மினுத்து வவ்வால்கள் கூட்டமாய் அப்பிக்கொண்டதை மிகவும் அழகாய் கீழ்க்கண்ட வரிகளில் எழுதுகிறார்.
"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினையை மாச்சிறைப் பறவை"
இந்த வரிகளை என் அகழ்நானூறு 27 ல் அப்படியே தொடக்கவரிகளாய் தைத்து நெய்துள்ளேன்.....சொற்கீரன்
அகழ்நானூறு 27
_____________________________________________
சொற்கீரன்.
"பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன
சேயுயர் சினையை மாச்சிறைப் பறவை"
கல்லெறிந்தாற் போல் காரின் குழைதரு
மஞ்சு இனமென வான் திரை கிழிக்கும்
சூர்கலி கொல் இருள் அஞ்சுரம் ஆரும்
அகலம் கிளர்தர ஆற்றுப்படூஉம்
அடுபோர் மள்ளன் என்னாது என்னை
இமைச்சிறை பூட்டி விழிக்குள் வீழ்த்தும்
அன்னவள் கண்சுரம் ஆற்றுப்படையின்
தண்ணிய நிழலிய நீளிடை புகுவன்
விரைதி விரைதி கொய்சுவற்புரவியின்
கொள்மொழி பேசு கதழ்பரி அஃதின்
பூங்குழியும் ஈண்டு புயல் கரு பூக்க
நின் கால்விரல் எழுதி காலும் வெரூஉம்
கடுவிசை ஓம்பு காலம் ஈண்டு
பெருங்கல் மறிக்கும் வழியினை உடைப்பாய்
அவள் சில்பூ விழி இங்கு சீர்த்தவிடத்து.
________________________________________________________
No comments:
Post a Comment