ஷார்ட் ஃபில்ம்
________________________________________
ருத்ரா.
இருட்டையும் கூட
இலக்கியம் ஆக்கி விட
முடியுமா?
அப்படித்தான்
அந்த ரெண்டா கால் நிமிட
ஆங்கிலத்துண்டுப்படம் பார்த்தேன்.
ஆனால்
இரண்டு சொச்சம் நிமிடங்களுக்கும்
இருட்டைப்பூசிக்கொண்டு
ஒலி இசை அதிர்ந்தது.
பிறகு
புள்ளி பூஜ்யம் பூஜ்யம்..
செகண்டுக்கு
ஒரு ஒளிக்கீற்று.
அவ்வளவு தான்
படம் முடிந்து
வரிசை வரிசையாய்
எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருந்தன
ஐந்தாறு நிமிடங்களாய்.
அது என்ன தலைப்பு...
மறந்து விட்டதே...
மறக்காமல் அதையும் போட்டு விட்டார்கள்.
"தேடு"
எதை என்று தான் போடவில்லை.
இருட்டையா?
வெளிச்சத்தையா?
ஒரு ஆழமான ஆழமாகிய
எனக்குள்
அந்த நங்கூரத்தை
வீசி எறிந்தார்களே!
அது ஒரு
பில்லியன் டாலர் இலக்கியம் தான்.
_____________________________________________________
No comments:
Post a Comment