2026-07-15

ஈரோடு தமிழன்பன் எனும் உயிர்மழை!

 

ஈரோடு தமிழன்பன் எனும் உயிர்மழை!

___________________________________________

14.07.2026


"தினமும்

தமிழின் உயிர் மழை

பெய்து கொண்டிருப்பாயே!"


"தமிழின் மழைபெய்தால் போதும்

உனக்கு?

என் உயிர் எங்கோயோ

மேகமாய் நின்று அதை

பெய்து கொண்டிருக்கட்டும்.

தமிழுக்கு

எப்போதுமே

வான்சிறப்பு உண்டு.

தமிழ்(உடம்பும் உயிரும்) விசும்பின்

துளி வீழினல்லால்

உன் சொல்லின் 

பசும்புல் தலை காண்பு அரிது.

உன் தமிழின் எழுச்சியை

எப்போதும் மழை பெய்து கொண்டிரு.

என் தமிழ் மூச்சின்

உயிர் அளபடையாய்

ஒற்று அள‌படையாய்

தமிழின் புகழ்பாடும்

இன்னிசை அளபடையாயும்

நம் இலக்கணத்தமிழ் மழையை

உங்கள் மீது 

பொழிந்து கொண்டேயிருப்பேன்."

_____________________________________

சொற்கீரன்